ராமநாதபுரத்தில் விநாயகர் சதுர்த்திவிழா கோலாகலம்
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பக்திபரவசத்துடன் கோலா கலமாக நடந்தது. தினமலர் நகர் வெற்றி விநாயகர் கோயில், பிள்ளையார் கோயில், வழிவிடு முருகன் கோயில் உள்ளிட்ட விநாயகர் கோயில்களில் நேற்று அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகம், சந்தணக்காப்பு அலங் காரம், தீபாராதனை மற்றும் அன்ன தானம் நடந்தது. இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் 46 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப் பட்டு வழிபாடுகள் நடந்தது.
* ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் வெள்ளி மூஞ்சிறு வாகனத்தில் விநாயகர் புறப்பாடாகி பஸ் ஸ்டான்ட் அருகில் காட்டு பிள்ளையார் கோயிலில் எழுந் தருளினார். அங்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது.
* பரமக்குடியில் அனைத்து விநாயகர் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஈஸ்வரன் கோயில் விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு 7 மணிக்கு உற்சவர் மூஞ்சூரு வாகனத்தில் வீதியுலா வந்தார். அனுமார் கோதண்ட ராமசாமி, சுந்தரராஜப் பெருமாள், முத்தாலம்மன், மீனாட்சிஅம்மன், எமனேஸ்வரம் சித்திவிநாயகர், நயினார்கோவில் நாகநாதசுவாமி உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இந்து முன்னணி சார்பில் 30 க்கும் மேற்பட்ட இடங்களில் 3 முதல் 12 அடி உயரத்திலான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்தது.
* ஆர்.எஸ்.மங்கலம் மிளகாய் நவதானிய வியாபாரிகள் சார்பில் பூவாணிப்பேட்டை கூ.கூ.விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா நடந்தது. பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆதாரனைகள் செய்யப்பட்டு அவல், கொழுக்கட்டை உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இரவில் கலைநிகழ்ச்சி நடந்தது. வாணியக்குடி வீர விநாயகர் கோயிலில் நடைபெற்ற சதுர்த்தி விழாவில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டன.
* திருவாடானை பாரதிநகரில் உள்ள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஏராளமானோர் பால்குடம் எடுத்து சென்றனர். பின்பு விநாயகருக்கு பால் அபிஷேகம் நடந்தது. அன்னதானம், கலை நிகழ்ச்சி நடந்தது.