திருப்பூரில் தீர்த்த கலச ஊர்வலம்
ADDED :3775 days ago
திருப்பூர்: இந்து அன்னையர் முன்னணி சார்பில், 108 தீர்த்த கலச ஊர்வலம், திருப்பூரில், இன்று மாலை, 4:00 மணிக்கு, நடைபெறுகிறது.இந்து முன்னணி மாநில பொது செயலாளர் சுப்ரமணியம் தலைமை வகிக்கிறார். ஈஸ்வரன் கோவிலில் துவங்கி, கோட்டை மாரியம்மன் கோவில் வரை நடைபெறும் ஊர்வலத்தை, மரகதம் துவக்கி வைக்கிறார். இந்து அன்னையர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட தலைவர் சித்ரா தலைமையில், 300 பெண்கள், மாவிளக்கு எடுக்கின்றனர்.பொது செயலாளர் நிர்மலா தலைமையில், 100 பெண்கள் முளைப்பாரி எடுத்து, ஊர்வலம் வருகின்றனர். துணை தலைவர் ஜோதிமணி தலைமையில், 108 தீர்த்த கலசமும், துளசி, லதா, தேவி தலைமையில், 500 பெண்கள் பங்கேற்கின்றனர்.