உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மாசிவீதிகளில் வலம் வந்த விநாயகர்கள்!

மதுரை மாசிவீதிகளில் வலம் வந்த விநாயகர்கள்!

மதுரை: மதுரை மாசி வீதிகளில் இந்து அமைப்பினர் சார்பில் 60க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.இந்து மக்கள் கட்சி தலைவர் சோலைகண்ணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பாம்பன் பாலாஜி, சோலைஅழகர், அன்பழகன் முன்னிலை வகித்தனர். இலங்கை எம்.பி., சீனித்தம்பி யோகேஸ்வரன் துவக்கி வைத்து பேசியதாவது: இலங்கையில் பவுத்தர்கள் 20 சதவீதம் பேர் உள்ளனர். அங்கு நடக்கும் பவுத்த விழா ராணுவ பாதுகாப்புடன் சிறப்பாக நடக்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒருங்கிணைந்தால், யாராலும் இந்துக்களை வெல்ல முடியாது. இலங்கையில் 1901ம் ஆண்டில் 23 சதவீதம் இந்துக்கள் இருந்தனர். தற்போது 12.6 சதவீதம் என குறைந்துள்ளது.அமெரிக்காவில் இந்துக்களின் எண்ணிக்கை 26 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்து தர்மம் அறிந்து அமெரிக்க கிறிஸ்தவர்கள், இந்துக்களாக மாறி வருகின்றனர் என்றார். விஸ்வ இந்து பரிஷத், சிவசேனா, இந்து மக்கள் முன்னணி, அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !