உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க கோரிக்கை!

திருப்பதி சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க கோரிக்கை!

வேலுார்: சென்னையில் இருந்து, ரேணிகுண்டா வரை இயக்கப்படும், திருப்பதி பிரம்மோற்சவம் சிறப்பு ரயிலை, தொடர்ந்து இயக்க வேண்டும் என, ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அரக்கோணம் ரயில் பயணிகள் சங்க தலைவர், நைனா மாசிலாமணி  வெளியிட்ட அறிக்கை:திருப்பதி பிரம்மோற்சவம் விழாவையொட்டி, 17ம் தேதி முதல், 24ம் தேதி வரை, பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தினமும், சென்னை சென்ட்ரலில் இருந்து, (ரயில் எண்: 56001), பிற்பகல், 1:15 மணிக்கு புறப்பட்டு, அரக்கோணம் வழியாக, மாலை, 5:00 மணிக்கு, ரேணிகுண்டா சென்றடைகிறது. பின், இதே ரயில், 5:35க்கு புறப்பட்டு, இரவு, 9:25 மணிக்கு, சென்னை கடற்கரை வந்தடைகிறது. இந்த ரயில், பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.எனவே, இந்த சிறப்பு ரயிலை, தொடர்ந்து இயக்க, ரயில்வே முன்வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !