செங்கல்பட்டு பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்!
ADDED :3670 days ago
செங்கல்பட்டு: மலைவையாவூரில் உள்ள, பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில், புரட்டாசி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டு அடுத்த மலைவையாவூர் கிராமத்தில், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இங்கு ஆண்டுதோறும், புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்த
ஆண்டு, புரட்டாசி பிரம்மோற்சவ விழா, கடந்த, 16ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.
18.9.15 முன்தினம், சந்திர பிரபை விழாவும், சிம்ம வாகன உலாவும்; நேற்று சூரிய பிரபை
விழாவும், அனுமந்த வாகன உலாவும் நடைபெற்றன. 19.9.15, சேஷ வாகனம், யாளி வாகன வீதி
உலாவும் நடைபெறுகிறது.