திருப்பரங்குன்றத்திற்கு ஆடி கிருத்திகை காவடி யாத்திரை!
ADDED :5233 days ago
சிவகங்கை :தேவகோட்டையை சேர்ந்த பக்தர்கள், 19 வது ஆண்டாக, பால்காவடி எடுத்து திருப்பரங்குன்றத்திற்கு பாதயாத்திரை சென்றனர். சொக்கநாதபுரம், குமாரவேலூர், சீனமங்கலம், சண்முகநாதபட்டணம், ஆவரங்குடி, கருங்குளம், கண்டனூர் பாலையூர், கல்லுப்பட்டி, மு.சூரக்குடி, ஏரியூர், ஓ.புதூர் பகுதி பக்தர்கள் பால் காவடி, காவடிகள் எடுத்து, திருப்பரங்குன்றத்திற்கு பாதயாத்திரை சென்றனர். ஜூலை 19 ஆம் தேதி சொக்கநாதபுரத்தில் காவடி புறப்பட்டது. ஜூலை 23 ல் திருப்பரங்குன்றம் செல்கின்றனர். அங்கு, பால்குடம், காவடிகளுடன், பக்தர்கள் கிரிவலம் வந்து நேர்த்தி செலுத்துவர். பாதயாத்திரை விழாக்குழுவினர் ஏற்பாட்டை செய்கின்றனர்.