ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் திருக்கல்யாணம் கோலாகலம்!
ADDED :4007 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: புரட்டாசி பிரம்மோற்சவத்தின் 6ம் நாளை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபத்ரசயனர் திருக்கல்யாணம் நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் கோவிலின் புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழா, கடந்த செப்.16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 6ம் திருநாளில் வடபத்ரசயனர், பூமாதேவி, ஸ்ரீதேவி திருக்கல்யாணம் வானமாமலை மடத்தில் நடந்தது. பத்ரிநாராயண பட்டர், பாலாஜி பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தனர். திரளான பக்தர்கள் தரிசித்தனர். நாளை (செப்.22ல்)மாலை 3 மணிக்குமேல், தெற்குமாடதெரு, குப்பனையங்கார் மண்டபத்தில் பெரியபெருமாள் சயனசேவை நடக்கிறது.