உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வனம் உருவானால் பெருமாள் வாசமிருப்பார்!

வனம் உருவானால் பெருமாள் வாசமிருப்பார்!

திருப்பூர் :"வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில், பாரப்பாளையம் நடுவளவு தோட்டத்தில், 1,800 மரக்கன்று நடும் பணி, நேற்று துவங்கியது. இதில் பங்கேற்ற, சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணன், ""வனம் உருவாகும்போது, எம்பெருமான் வாசம் செய்வார், என்றார். மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் கனவை நிறைவேற்றும் வகையில், திருப்பூர் மாவட்டத்தில், ஒரு லட்சம் மரக்கன்று நட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு பராமரிக்கும் "வனத்துக்குள் திருப்பூர் திட்டம் செயல்படுத்தும் பணி படுமும்முரமாக நடந்து வருகிறது. இதுவரை, 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. வெற்றி அமைப்பின் இம் முயற்சியில், "தினமலர் நாளிதழும் பங்கெடுத்துள்ளது.இத்திடத்தில், பாரப்பாளையம், நடுவளவு தோட்டத்தில், மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. ஒரே இடத்தில், 24 ஏக்கரில், 1,800 மரக்கன்று நடும் திட்டத்தை, ஆன்மிக சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணன், துவக்கி வைத்தார்.அவர் பேசியதாவது:பிரம்மமே மரம்; மரமே பிரம்மம். நைமி சாரண்யத்தில், வன ரூபமாக இறைவன் காட்சியளிக்கிறார். பாகவத புராணம் உபதேசம், அங்கு செய்யப்பட்டது. மரங்கள், எதையும் எதிர்பார்க்காது; வளர அனுமதித்தால் போதும்; தூய காற்று, காய், கனி, இலை, விதைகளை நமக்குத் தருகின்றன.பசுமையான எண்ணங்களை உருவாக்கும். தூய காற்று, தவறாமல் மழையை, மரங்கள் தரும். தீயவற்றை அழித்து, அமைதியான சூழலை தந்து, நமது ஆயுளை மரங்கள் அதிகரிக்கின்றன. நைமி சாரண்யம் போல், எங்கு வனங்கள் உள்ளனவோ, அங்கு பெருமாள் வாசம் செய்வார். "வனத்துக்குள் திருப்பூர் என்பதன் பொருள், பிரம்மமும், "திரு என்ற லட்சுமி கடாச்சமும் நிறைந்த ஊராக, திருப்பூர் மாறும். மயில் ஆடும்; குயில்கள் கூவும்; பறவைகள் வாசம் செய்யும்; இறைவன் வாசமிருப்பார்.

இவ்வாறு, அவர் பேசினார்.நிகழ்ச்சியில், நில உரிமையாளர்களான, "ரேவதி மெடிக்கல் சென்டர் சுப்ரமணியம், டாக்டர் ஈஸ்வரமூர்த்தி, "சத்யா டையிங் தெய்வசிகாமணி, "பாரத் டையிங் முருகு, "கீதா மெடிக்கல்ஸ் பழனிசாமி, வெங்கடாசலம் குடும்பத்தினர், "ராம்ராஜ் காட்டன் நாகராஜன், "சுவாமி டெக்ஸ்டைல்ஸ் ஈஸ்வரன், "வென்சுரா கார்மெண்ட்ஸ் கார்த்திகேயன், "மெஜஸ்டிக் கந்தசாமி, "யுனிசோர்ஸ் இந்தியா நிறுவன இயக்குனர்கள் மகேந்திரன், சுதாகர், "பேக்ட் ஆர்கிடெக்ட் இயக்குனர் உமா சங்கர், "நியூ ஹரிஜோன் சிஸ்டம் சீத்தாராமன், "கான்சாயி பிரவீன்குமார், "சுவாட் மந்த்ரா ஹோட்டல் இயக்குனர் பிரேம் அகர்வால், குமரன் கல்லூரி முதல்வர் ரேச்சல் நான்சி பிலிப், வெற்றி அமைப்பு தலைவர் சிவராம், திட்ட இயக்குனர் குமார், ஒருங்கிணைப்பாளர்கள் துரை, ஈஸ்வரன் மற்றும் குமரன் கல்லூரி பேராசிரியைகள், மாணவியர் பங்கேற்றனர்.

கிரிவலப்பாதையில்..: பசுமை பாரத இயக்கம், அலகுமலை திருக்கோவில் பக்தர் பேரவை, தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், தனியார் நிறுவனங்கள் இணைந்து, அலகுமலையை சோலைவனமாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளன. மூன்றாண்டுகளில், 700 மரக்கன்று நடவு செய்து, அவற்றை பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா, அலகுமலை அடிவாரத்தில், நேற்று நடந்தது; இசையமைப்பாளர் கங்கை அமரன், மரக்கன்று நட்டு துவக்கி வைத்தார். மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்கும் பொறுப்பை, திருக்கோவில் பக்தர் பேரவை ஏற்றுள்ளது. கிரிவலப்பாதையை சுற்றிலும் புங்கன், மகிழம், அரசு, நாவல் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளன. அலகுமலை அறங்காவலர் குழு தலைவர் சின்னு, திருக்கோவில் பக்தர் பேரவை மாநில செயலாளர் ராமசாமி, "ஆம்ஸ்ட்ராங் நிட்டிங் பழனிசாமி, கரட்டுப்பாளையம் கூட்டுறவு கடன் சங்க தலைவர் சுப்ரமணி, "ஜி.யு.எஸ்., கிளாத்திங் உரிமையாளர் உமாசங்கர், ஒருங்கிணைப்பாளர் சின்னையா, துணை ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், "ரியல் நிட் பேஷன் உரிமையாளர் குமார், சமுதாய பணிக்குழு உறுப்பினர்கள் முத்துக்கிருஷ்ணன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !