உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

ஊத்துக்கோட்டை: அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில், திரளான பக்தர்கள் தீ மிதித்து, அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்.பெரியபாளையம் அடுத்த, கே.ஆர்.கண்டிகை கிராமத்தில் உள்ள, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், பெரியாண்டவர் சன்னிதி உள்ளது. இங்கு, நேற்று முன்தினம், தீமிதி திருவிழா நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி, விரதம் இருந்து தீ மிதித்தனர். முன்னதாக காலை, அங்காளம்மன் மற்றும் பெரியாண்டவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.தொடர்ந்து, பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !