நல்ல தங்காள் கோவில் நாக பஞ்சமி விழா!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், நச்சாந்துப்பட்டி நல்லதங்காள் கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி முதல் வாரம், பொங்கல் வைக்கும் திடலில், உலக நன்மையை கருதியும், குழந்தைபேறு, திருமண தடைகள், கர்மவினைகள், கடும் நோய்கள், குடும்ப குழப்பங்கள் விலக, நாக பஞ்சமியன்று சிறப்பு யாகங்கள் நடக்கிறது. அதன்படி, நேற்று காலை நடந்தது. தொடர்ந்து, கோட்டை பெரியகருப்பர், சின்னகருப்பர், பொற்பனை முனிஸ்வரர், அடைக்கலம் காத்தார், முப்புலி அய்யனார், சந்தியாசியார், சாவக்காரர், பட்டாணியார், அண்ணன்எழுவர், அன்பு தங்கை பிச்சி, பெரிய அடைக்கனார், சின்னஅடைக்கனார் ஆகியோர் உற்சவ விக்ரகங்களுக்கு, சிறப்பு அபிசேகம் ஆராதனை நடந்தது. பின்னர், அறுசுவை உணவுடன் அன்னதானம், மாலை நாகதேவி நல்லதங்காள் அம்மன் ஊஞ்சல் உற்சவம் திருவிளக்கு பூஜைகள் நடந்தது. யாக பூஜைகளை நச்சாந்துப்பட்டி ரவிசங்கர் பட்டாச்சாரியார் தலைமையில் செய்தனர். விழா ஏற்பாடுகளை, நச்சாந்துப்பட்டி நகரத்து நல்லோர் கீழத்தெரு மேலத்தெரு பங்காளிகள் மற்றும் ஊரார், திருவருள் நல்லி தெய்வீகப்பேரவை அறக்கட்டளையினர் செய்து வந்தனர்.