உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

பழநியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

பழநி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பழநிநகர், ஒன்றிய பகுதியில் இந்துமக்கள் கட்சி சார்பில் வைக்கப்பட்ட 52 விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. மாநில தலைவர் அர்ஜீன்சம்பத் தலைமைவகித்தார். பொதுச்செயலாளர் ரவிக்குமார், மாவட்ட அமைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். பழநி அடிவாரம் பாதவிநாயகர் கோயிலிருந்து பகல் 2.30 மணிக்குமேல் விநாயகர் சிலைகள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஊர்வலம் புறப்பட்டது. சன்னதிவீதி, பஸ் ஸ்டாண்ட், காந்திமார்க்கெட் உட்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, சண்முகநதியில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. ஏ.டி.எஸ்.பி.,சீனிவாசன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !