கோபுர நிலைகளின் தத்துவம்!
ADDED :5223 days ago
கோயில்களில் 3,5,7,9,11,13 என்ற அளவுகளில் நிலைகள் இருக்கும். 3 நிலை கோபுரம் மனம், வாக்கு, உடலால் ஏற்படும் அவஸ்தைகளைக் குறைக்கும். 5 நிலை கோபுரம் ஐம்பொறிகளை (மெய், வாய், கண், மூக்கு செவி) அடக்குவதையும் 7 நிலை கோபுரம் ஐம்பொறிகளுடன் மனம், புத்தி ஆகியவற்றை அடக்குவதையும், 9 நிலை கோபுரம் மேற்கண்ட ஏழுடன் சித்தம், அகங்காரம் ஆகியவற்றை அடக்குதலையும் குறிக்கும். இதற்கு மேலான கோபுரங்கள் இந்த ஒன்பதையும் அடக்கினால் இறைவனை அடையலாம் என்பதைக் குறிக்கின்றன. கோபுரத்தை ஸ்தூல லிங்கம் என்பர். காலையில் எழுந்ததும் கோபுர தரிசனம் செய்தால், அன்றைய காரியங்கள் நன்றாக நடக்கும். ஆனால், ஒரு நிபந்தனை. செய்கின்ற காரியங்கள் அனைத்திலும் நியாயம் வேண்டும்.