கொடிமர வழிபாடு
ADDED :5222 days ago
கோயிலுக்குள் பலிபீடத்தை அடுத்துள்ள கொடிமரத்தை வணங்கும் போது கீழிருந்து மேலாக வணங்க வேண்டும். கீழேயுள்ள சதுர வடிவ பாகம் பிரம்ம பாகம் எனப்படும். சரஸ்வதியை மனதில் நினைத்து, இதை வணங்கினால் கல்வியறிவு விருத்தியாகும். பின்னர் அதற்கு மேலுள்ள எண்கோண வடிவமுள்ள பீடத்தை வணங்க வேண்டும். இது விஷ்ணு பாகமாகும். லட்சுமி நாராயணரை மனதில் நினைத்து இப்பகுதியை தரிசிக்க, நிலையான செல்வம் கிடைக்கும். பின்னர் உயரமாய் நீண்டிருக்கும். ருத்ர பாகமான கம்பத்தை வணங்க வேண்டும். நல்ல கல்வியும், அளவான செல்வமும் பெற்றவர்கள், எக்காரியத்தையும் சாதிப்பார்கள்.