காத்யாயணி விரம்
ADDED :5295 days ago
வடமாநிலங்களிலும் மார்கழி பாவை நோன்பு அக்காலத்தில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. காத்யாயணி அம்மனை இக்காலத்தில் பெண்கள் வணங்குவர். யமுனை நதியில் நீராடி, மணலை தண்ணீரில் நனைத்து காத்யாணி அம்மன் சிலை செய்வர். சந்தனப் பொட்டிட்டு, மலர் தூவி, பழம் படைத்து. நறுமணப்புகையிட்டு வணங்குவர். காத்யாயணியிடம், நந்தகோபன் மகளான கண்ணன் போல எங்களுக்கு மணாளன் வேண்டும், என வேண்டிக் கொள்வர். காத்யாயனிக்கு மகமாயி, மகாயோகினி, ஈஸ்வரி என்று பெயர்சூட்டி அழைத்தனர்.