கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில் புரட்டாசி பூஜை
ADDED :3770 days ago
ரெட்டியார்சத்திரம் : புரட்டாசி இரண்டாவது சனிவாரத்தை முன்னிட்டு, கொத்தப்புள்ளி கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. மூலவர், மூலஸ்தான சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகம் நடந்தது. துளசி, மலர் சாத்துப்படி நடந்தது. செங்கமலவள்ளி சமேத பெருமாளுக்கு சந்தனக்காப்பு அலங்காரத்துடன், விசேஷ பூஜைகள் நடந்தன. உற்சவருக்கு அபிஷேக, ஆராதனைகளுடன் ஏகாந்த சேவை நடந்தது. வீர ஆஞ்சநேயர், அனுக்ரக பைரவருக்கு சந்தனக்காப்பு அலங்காரத்துடன், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.