அக்னி தீர்த்த கடலில் மோட்ச தீபம்
ADDED :3768 days ago
ராமேஸ்வரம் : மறைந்த தயானந்தா சரஸ்வதி சுவாமி ஆன்மா சாந்தியடைய வேண்டி, தர்ம ரக்ஷன அமைப்பு சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் மலரஞ்சலி செலுத்தினர். பின்னர் திருக்கோயிலில் மோட்ச தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்தனர். தர்ம ரக்ஷன அமைப்பு மண்டல செயலாளர் நாகராஜன், மாவட்ட தலைவர் வாசன், பாஜக நகர் தலைவர் முத்துசெல்வம், அறநிலையத்துறை செயலாளர் நாகேந்திரன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மற்றும் நிர்வாகி சுந்தர முருகன் பங்கேற்றனர்.