ராம நாமா உச்சரித்தால் பாவங்கள் நீங்கும் திருச்சி கே. கல்யாணராமன் பேச்சு!
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடத்தில், கம்ப ராமயாண சொற்பொழிவு நிகழ்ச்சி, செப்., 29 முதல் அக்., 11 வரை நடக்கிறது. நேற்று இரவு ஸ்ரீ ராமாவதாரம் என்ற தலைப்பில் திருச்சி கே. கல்யாணராமன் ஆற்றிய சொற்பொழிவில் பேசியதாவது:தீயவர்களை வதம் செய்து நல்லவர்களை காப்பதற்காக பகவான் அவதரிக்கிறார். ராவணனை சம்ஹாரம் செய்வதற்கு, தசரதனிடம் ராமனாக அவதரிக்கிறார். 16 குணங்கள் நிரம்பியவராக, நமக்காக மனிதராக வந்து வாழ்ந்து காட்டுகிறார். இந்த வையத்தில் நல்ல மனிதனாக வாழ்ந்தால் நம்மை தெய்வமாக கொண்டாடுவார்கள் என்பது வள்ளுவர் வாக்கு. இந்த வாக்குக்கு ஏற்ப அக்காலத்தில் அயோத்தியில் ராமனாக அவதரித்து வாழ்ந்து காட்டியவர். ராம நாமாவை சொன்னால் சகல பாவமும் போகும். நம் உடம்பில் உள்ள 10 இந்திரியங்கள் என்ற ராவணனை வெல்ல ராம நாமாவை சொல்ல வேண்டும். ராம நாமாவை சொன்னால் மனம், வாக்கு, காயம் சுத்தம் அடைந்து, எல்லோருக்கும் நன்மை செய்து நாமும் நல்லவனாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் என்றார்.