உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்குடி மிக்கேல் அதிதூதர் ஆலயம் தேர்பவனி விழா கோலாகலம்

செங்குடி மிக்கேல் அதிதூதர் ஆலயம் தேர்பவனி விழா கோலாகலம்

ஆர்.எஸ்.மங்கலம்: செங்குடி தூய மிக்கேல் அதிதூதர் ஆலய விழா செப்.,20ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் நவநாள் திருப்பலி, நற்கருனை ஆராதனை, ஜெப மாலை நிகழ்ச்சிகள் நடந்தது. முக்கிய நிகழ்வான தேர் பவனி விழா நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு நடந்தது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் திருஇருதய ஆண்டவர், ஆரோக்கியமாதா, அருளானந்தர், மிக்கேல் அதிதூதர் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். விழாவின் கடைசி நாளான நேற்று காலை திருவிழா கூட்டு திருப்பலி நடந்தது. செங்குடி பங்குத்தந்தை சாமுஇதயன் நிகழ்த்தினார். மாலை 5 மணிக்கு திருவிழா நிறைவு தேர்பவனி நடந்தது. தொடர்ந்து கொடியிறக்கபட்டு விழா நிறைவடைந்தது. கிராமத்தலைவர் சேவியர்ராஜ், செயலாளர் ஆரோக்கிய மேரீஸ், பொருளாளர் சேவியர், ஆசிரியர்கள் ஆரோக்கிய சாமி, ஆரோக்கிய சகாயதாஸ், தனபாலன், பாபுசெல்வ ராஜ், அருள்ஜான்பிரிட்டோ, கருணாகரன், ஜோதி, அந்தோணி சாமி, ஆரோக்கியசாமி, மிக்கேல்ராஜ், ஊராட்சி தலைவர்கள் செங்கோல், சரவணன் மற்றும் ஜான், மிக்கேல்மாறன், ஜார்ஜ், புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளி தாளாளர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !