சத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா
ADDED :3678 days ago
சேலம்: சேலம், பழைய சூரமங்கலம், சத்யசாய் சேவா சமிதி சார்பில், சத்ய சாய்பாபா, 90வது பிறந்த நாளையொட்டி, 90 மணி நேர தொடர் அகண்ட சாய்பஜன், தெய்வீகம் திருமகாலில், நேற்று, மாலை, 5 மணிக்கு துவங்கியது. விழாவையொட்டி, சாய்பாபா திருஉருவ படம், வண்ணமலர்களால் அலங்கரித்து, குத்துவிளக்கு, ஏற்றப்பட்டது. பாலவிகாஷ் பள்ளி குழந்தைகள் வேத மந்திரங்கள் ஓதி, சாய்பஜனை துவக்கி வைத்தனர். மேட்டூர், கோவை மற்றும் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த சாய் பக்தர்கள், 50 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு, பஜனை பாடினர். தொடர்ந்து, இரவு, 12 மணி முதல், டாக்டர் விஜயலட்சுமி குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. வரும், 4ம் தேதி, பகல், 12 மணிவரை, 90 மணி நேர அகண்ட சாய்பஜன் நடக்கிறது. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சாய் பக்தர்கள் பஜனை நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.