நாளை காந்தி ஜெயந்தி: கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் அபூர்வ சூரியஒளி
ADDED :3678 days ago
நாகர்கோவில்: காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் நாளை விழும் அபூர்வ சூரிய ஒளியை காண சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். காந்தியடிகளின் அஸ்தி கன்னியாகுமரி கடலில் கரைக்க கொண்டு வந்த போது அது கடற்கரையில் பொது மக்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அரசு சார்பில் அங்கு நினைவு மண்டபம் எழுப்பப்பட்டது. இந்த மண்டம் கட்டப்பட்ட போதே அக்டோபர் இரண்டாம் தேதி, அவரது பிறந்த நாளில் அஸ்திபீடத்தில் சூரிய ஒளி விழும் வகையில் வடிவமைக்கப் பட்டது. நாளை பகல் 12 மணிக்கு இந்த சூரிய ஒளி அஸ்திகலசத்தில் விழும். அப்போது அரசு சார்பில் கலெக்டர் சஜ்ஜன்சிங்சவான் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார். இதில் எம்.எல்.ஏ.க் கள் மற்றும் பொது நல அமைப்பினர் கலந்து கொள்கின்றனர்.