உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் கூட்ட நெரிசலால் ஏற்படும் விபத்தை தடுப்பது குறித்த செயல்விளக்கம்

கோவில்களில் கூட்ட நெரிசலால் ஏற்படும் விபத்தை தடுப்பது குறித்த செயல்விளக்கம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி போலீஸ் சப்-டிவிசனுக்கு உள்பட, 4 இடங்களில் கோவில்களில் கூட்ட நெரிசலால் ஏற்படும் விபத்தை தடுப்பது குறித்த செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் எஸ்.பி கண்ணம்மாள் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி போலீஸ் சப்-டிவிசனுக்கு உட்பட்ட நகர போலீஸ் ஸ்டேசன் எல்லையில் உள்ள காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில், காவேரிப்பட்டணம் போலீஸ் ஸ்டேசன் எல்லைக்குட்பட்ட பென்னேஸ்வர மடம் ஈஸ்வரன் கோவில், குருபரப்பள்ளி போலீஸ் ஸ்டேசன் எல்லைக்குட்பட்ட ஆவலநத்தம் பசுவேஸ்வரர் கோவில், கே.ஆர்.பி டேம் போலீஸ் ஸ்டேசன் எல்லைக்குட்பட்ட அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் ஆகிய இடங்களில் கூட்ட நெரிசலின் போது ஏற்படும் விபத்தை தடுப்பது குறித்த செயல்விளக்க நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., சந்தானபாண்டியன், கிருஷ்ணகிரி டவுன் இன்ஸ்பெக்டர் தங்கவேல், எஸ்.ஐ. வீரமணி ஆகியோர் முன்னிலையில் கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில் அருகே செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. அப்போது கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலால் ஏற்படும் விபத்தினை தடுப்பது குறித்தும், பாதிக்கப்படும் பக்தர்களுக்கு செய்யப்படும் முதலுதவி மற்றும் அவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்புவது குறித்த பேரிடர் மீட்பு ஒத்திகை செய்யப்பட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள், கோவில் நிர்வாகத்தினர், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !