ஆழ்வார்குறிச்சி கோயிலில் சிம்ம வாகனம் வெள்ளோட்டம்
ADDED :5229 days ago
ஆழ்வார்குறிச்சி:ஆழ்வார்குறிச்சி நடுத்தெரு முப்புடாதியம்மன் கோயிலில் புதிய சிம்ம வாகனம் வெள்ளோட்டம் நடந்தது.ஆழ்வார்குறிச்சி கீழத்தெருவில் நடுத்தெரு முப்புடாதியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நவராத்திரி கொடை திருவிழா உட்பட பல்வேறு விழா நாட்களில் முப்புடாதி அம்மன் உலா வருவதற்காக புதிய சிம்ம வாகனம் செய்யப்பட்டுள்ளது. நேற்று அதற்காக நடந்த வெள்ளோட்ட விழாவில் வேணுகோபால் ஐயர் கும்பபூஜை, வேதபாராயணம், சிறப்பு வழிபாடுகளை நடத்தினார்.வெள்ளோட்ட விழாவில் ஆலங்குளம் எம்எல்ஏ பி.ஜி.ராஜேந்திரன், நகர செயலாளர் சங்கர், ஒன்றிய ஜெ.,பேரவை செயலாளர் எஸ்.வி.முருகேஷ், சைலப்பபிள்ளை, சுந்தர், கண்டக்டர் கணேசன், பாலா, விஸ்வநாதன், சமையல் கல்யாணி, முத்தம்மாள், பாப்பம்மாள், அன்னம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.