மடவார்விளாகம் வடக்குவா செல்விஅம்மன் கோயில் கொடை விழா
ADDED :5290 days ago
திருநெல்வேலி:மடவார்விளாகம் வடக்குவாசெல்வி அம்மன் கோயில் கொடை விழா வரும் 25ம் தேதி துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது.பாப்பான்குளம் அருகேயுள்ள மடவார்விளாகத்தில் அமைந்துள்ள வடக்குவாசெல்வி அம்மன் கோயில். இந்த கோயிலில் கொடை விழா வரும் 25ம் தேதி துவங்குகிறது. அன்று மாலை அம்மனுக்கு மாக்காப்பு அலங்கார தீபாராதனை, குடியழைப்பு நடக்கிறது.26ம் தேதி கொடை விழாவன்று காலையில் கரகம் எடுத்து வீதி உலா, மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, மாலை 5 மணிக்கு சிறப்பு தீபாராதனை, இரவில் முழுக்காப்பு தீபாராதனை, நள்ளிரவு 12 மணிக்கு சப்பரத்தில் அம்மன் வீதி உலா, அதிகாலையில் படைப்பு தீபாராதனை நடக்கிறது.ஏற்பாடுகளை மடவார்விளாகம் வடக்குவாசெல்வி அம்மன் கோயில் கொடை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.