ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம்!
ADDED :3689 days ago
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சரண்யா நகர் மற்றும் பிரபு நகர் பகுதிவாசிகள் சார்பில், நேற்று முன்தினம், ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதுார் மடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ பரம ஹம்ஸேத்யாதி வரத எதிராஜ ஜீயர் ஸ்வாமிகள் மங்களா சாசனத்துடன், ஸ்ரீமான் உவே சுதர்சனாசார்யர் ஸ்வாமிகள் அனுக்கிரஹத்துடன் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. சிறப்பு மலர் மற்றும் ஆபரண அலங்காரத்தில், திருமண கோலத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலித்த பெருமாளை தரிசிக்க, கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர். அதை தொடர்ந்து, சுவாமி வீதியுலா நடந்தது.