ஆன்மிக இயக்கம் சார்பில் செவ்வாடை அணிந்து கஞ்சிக்கலய ஊர்வலம்!
ADDED :3688 days ago
கோவை: கோவை மாவட்ட ஆதிபராசக்தி, ஆன்மிக இயக்கம் சார்பில் நேற்று, கஞ்சிக்கலய ஊர்வலம் நடந்தது. கோவை மாவட்டத்திலுள்ள, மேல் மருவத்துார், ஆதிபராசக்தி, சித்தர் சக்திபீடங்கள், மற்றும் அனைத்து வழிபாட்டு மன்றங்கள் இணைந்து, மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், தொழில்வளம் பெருகவும், அமைதி நிலவவும், கஞ்சிக்கலய ஊர்வலம் நடந்தது. சலிவன்வீதி, மாரண்ணகவுடர் பள்ளி வளாகத்தில் ஊர்வலம் துவங்கியது. அங்கிருந்து சுப்ரமணியம் ரோடு வழியாக, ஆர்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானத்தை அடைந்தது. செவ்வாடை பக்தர்கள் சுமந்து வந்த கஞ்சிக்கலயங்களை சமர்பித்தனர். அங்கு, கஞ்சிவார்க்கும் நிகழ்ச்சி நடந்தது.