சென்னிமலை கோவில் உண்டியல் திறப்பு: ரூ.19 லட்சம் பக்தர்கள் காணிக்கை
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டது. இதில் பக்தர்கள், 19.50 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தி இருந்தனர். சென்னிமலை மலை மீதுள்ள முருகன் கோவிலில், ஏழு நிரந்தர உண்டியல் மற்றும் திருப்பணி உண்டியல் ஒன்றும் உள்ளது. பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை, மூன்று மாதத்துக்கு ஒரு முறை, உண்டியல் திறப்பு செய்வது வழக்கம். உண்டியல் திறப்பு நடந்தது. பண்ணாரி கோவில் துணை ஆணையர் மாரிமுத்து, ஈரோடு உதவி ஆணையர் முருகையன் ஆகியோர் முன்னிலையில், உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. நிரந்தர உண்டியலில், 18 லட்சத்தது, 95 ஆயிரத்து, 490 ரூபாயும், திருப்பணி உண்டியலில், 59 ஆயிரத்து, 597 ரூபாய் என, ரொக்கம், 19 லட்சத்து, 55 ஆயிரத்து, 087ம், தங்கம், 172 கிராம், வெள்ளி, 701 கிராம் இருந்தது. கோவில் செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், தலைமை எழுத்தர் ராஜீ உட்பட கோவில் பணியாளர்கள், அர்ச்சர்கள் பங்கேற்றனர்.