செடல் திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :5228 days ago
கடலூர் : கடலூர் மாவட்டம் முத்துகிருஷ்ணாபுரம் முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழாவில் பக்தர்கள் அலகு குத்தி வாகனங்களை இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த முத்துகிருஷ்ணாபுரம் முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் சாகை வார்த்தல், சுவாமி வீதியுலா நடந்தது.நேற்று காலை கரகம் எடுத்து வரப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் தங்கள் உடலில் செடல் போட்டு நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். சில பக்தர்கள் தங்கள் முதுகில் அலகு குத்திக் கொண்டு பஸ், லாரி, கார், வேன், பொக்லைன் உள்ளிட்ட வாகனங்களை ஒரு கி.மீ., தூரம் வரை இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதியம் கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கப்பட்டது. இரவு சாமி வீதியுலா நடந்தது.