கன்னியம்மன் கோவிலில் தீமிதி விழா
ADDED :5263 days ago
விழுப்புரம் : விழுப்புரம் கன்னியம்மன் கோவில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தி வேண்டுதலை நிறைவேற்றினர்.விழுப்புரம் கே.கே.,ரோடு கன்னியம்மன் கோவில் 41வது ஆடிப்பெருக்கு விழா கடந்த 13ம் தேதி துவங்கியது. நேற்று காலை கன்னியம்மனுக்கு பால்குடம் வீதியுலா மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து பக்தர்கள் உடலில் அலகு குத்தி, நேருஜி ரோடு வழியாக கன்னியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். தீமிதி விழாவில் பக்தர்கள் தீ மிதித்தனர். இரவு சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதியுலா நடந்தது.