திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி விழா கோலாகலம்!
ADDED :3678 days ago
பரமக்குடி: பரமக்குடி திரவுபதி அம்மன் கோயில் பூக்குழித் திருவிழா செப். 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று காலை 11 மணிக்கு கோயில் கொடிமரத்தில் கருட கொடி ஏற்றி வைக்கப்பட்டது. செப். 25 காலை 9.30 மணிக்கு அம்மன் திருக் கல்யாணம், தொடர்ந்து அர்ச்சுனன் தபசு நிலை, பீமவேசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. அக். 1 ல் ரவாரிக்கோட்டை, அரவான் களப்பலி நடந்தது. அக். 4 காலை 5 மணிக்கு பூ வளர்க்கப்பட்டு, மாலை 6 மணிக்கு கோயில் பூசாரி காளிவேடத்துடன் புறப்பட்டு சபதம் முடித்த பின் வைகை ஆற்றில் இருந்து கரகம் எடுத்து வரப்பட்டது. மாலை 7.30 மணிக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. விரதமிருந்த ஏராளமான பெண்கள் பூ முழுகினர். ஏற்பாடுகளை திரவுபதி அம்மன் கோயில் பக்த சபை மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.