வீரட்டானேஸ்வரர் கோவிலில் உண்டியல் வருவாய் ரூ. 2 லட்சம்!
ADDED :3768 days ago
பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் காணிக்கை உண்டியல் நேற்று திறந்து எண்ணப்பட்டது. பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை தொகை எண்ணும் பணி நேற்று நடந்தது. கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன் தலைமை தா ங்கினார். அண்ணா அரசு பொறியியல் கல்லுாரி முதல்வர் செந்தில்குமார், என்.எஸ்.எஸ்.அலுவலர் சீனுவாசன், கோவில் உபயதாரர் சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியியல் கல்லுாரி என்.எஸ்.எஸ்.மாணவர்கள் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் கடந்த 3 மாதங்களில் 2 லட்சத்து 3,680 ரூபாய் உண்டியல் மூலம் காணிக்கை வருவாய் கிடைத்தது.