உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனாதிருத்ரேஷ்வரர் கோவிலில் மழைக்காக ஏகாதச மகா ருத்ரயாகம்

அனாதிருத்ரேஷ்வரர் கோவிலில் மழைக்காக ஏகாதச மகா ருத்ரயாகம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், அனாதிருத்ரேஷ்வரர் கோவிலில், நேற்று, மழைக்காக ஏகாதச மகா ருத்ரயாகம் நடைபெற்றது. காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம் பகுதியில் அனாதிருத்ரேஷ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், நேற்று, காலை 7:30 மணியளவில், மழைக்காவும் உலக நன்மைக்காவும் ஏகாதசருத்ர மகா யாகம் நடைபெற்றது. காலை 10:00 மணியளவில், மூலவருக்கு, 108 இளநீர் அபிஷேகம், அதை தொடர்ந்து யாகத்தில் வைக்கப்பட்ட கலச புனித நீரில் அபிஷேகம் நடைபெற்றது. காலை 11:00 மணியளவில் தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !