உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலூர் பெருமாள் கோவிலில் அக்., 22ல் தேரோட்டம்

சூலூர் பெருமாள் கோவிலில் அக்., 22ல் தேரோட்டம்

சூலுார்: சூலுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் உற்சவம் மற்றும் தேரோட்டம் வரும், 22ம் தேதி நடக்கிறது. சூலுார் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத திருவேங்கடநாத பெருமாள் கோவில் பழமையானது. இங்கு, 18ம்தேதி இரவு, 8:00 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜையுடன் தேர்திருவிழா துவங்குகிறது. கொடியேற்றம் மற்றும் தேர் முகூர்த்தக்கால் போடுதல், 19ம்தேதி நடக்கிறது. இருகால யாகசாலை பூஜைகள் முடிந்து சுவாமி புறப்பாடு நடக்கிறது. திருக்கல்யாண உற்சவம், 22ம் தேதி காலை, 9:00 மணிக்கு துவங்குகிறது. மாலை, 3:00 திருத்தேர் வடம்பிடிக்கப்படுகிறது. தொடர்ந்து, நகர சோதனை, அம்பு சேர்வை நடக்கிறது. பாரிவேட்டை, தெப்போற்சவம், 23ம்தேதி இரவு, 8:00 மணிக்கு நடக்கிறது. வசந்த உற்சவம், 24ம்தேதி காலை நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !