100 ஆண்டுகளாக சீரழியும் சிவன் கோவில்!
ADDED :3666 days ago
ஆர்.கே.பேட்டை: ஏரிக்கரையில் புதர் மண்டி பாழடைந்து கிடக்கும் சிவாலயத்தை சீரமைத்து, வழிபாடுகளை துவங்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, சந்திரவிலாசபுரம் அருகே, கோவர்த்தனகிரி மலையை ஒட்டியுள்ள ஏரிக்கரையில், பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக பாழடைந்து கிடப்பது பகுதிவாசிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. கோவில் வரலாறு குறித்து பகுதிவாசிகள் யாருக்கும் தெரியவில்லை. முற்றிலுமாக சிதையும் முன், கோவிலை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.