ஊத்துக்கோட்டை மகா கால பைரவருக்கு சிறப்பு பூஜை!
ADDED :3667 days ago
ஊத்துக்கோட்டை : மகா கால பைரவருக்கு நடந்த அஷ்டமி பூஜையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.ஊத்துக்கோட்டை அடுத்த, தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ள, மகா கால பைரவர் கோவிலில், ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை நாட்களில் வரும் அஷ்டமி திதி நாளில், சிறப்பு பூஜைகள் நடைபெறும். நேற்று முன்தினம் அஷ்டமி தினத்தை ஒட்டி, மாலை, 6:00 மணிக்கு, மூலவருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள், தேன், இளநீர் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. பின், மூலவருக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பகர்தகள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.