உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ரத யாத்திரை 10ம் தேதி துவக்கம்!

ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ரத யாத்திரை 10ம் தேதி துவக்கம்!

புதுச்சேரி: ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டை முன்னிட்டு, வரும் 10ம் தேதி, புதுச்சேரியில் இருந்து திருக்கோவிலுாருக்கு ரத யாத்திரை துவங்குகிறது. உலகளந்தான் பொன்னடியார் மகாசபை  ஆலோசகர் வீரராகவ ராமனுஜதாசர் அளித்த பேட்டி: ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த தினம் 2017ம் ஆண்டு மே மாதம்  1ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, வரும் 10ம் தேதி, முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவிலில் இருந்து ராமானுஜர் ரத உற்சவம் துவங்குகிறது. 6 அடி உயரம் கொண்ட ராமானுஜர் சிலை எழுந்தருளிய ரத ஊர்வலத்தை, திருக்கோவிலுார் ஜீயர் ஸ்ரீநிவாச ராமனுஜச்சாரியார் துவக்கி வைக்கிறார். பாஸ்கர் எம்.எல்.ஏ.,   உள்ளிட்ட மகாசபை நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். காலை 6.00 மணிக்கு புறப்படும் ரதயாத்திரை,   புதுச்சேரி மற்றும் தமிழக  கிராம பகுதி வழியாக மறுநாள்  11ம் தேதி, திருக்கோவிலுார் உலகளந்த  பெருமாள் கோவிலை சென்றடைகிறது. இவ்வாறு வீரராகவராமனுஜதாசர் கூறினார். சபைத் தலைவர் செல்வநம்பி, துணைத் தலைவர் மணிவண்ணன், செயலாளர் ஆராவமுதன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !