காரைக்காலில் புனித பிரான்சிஸ் அலங்கார தேர்பவனி
ADDED :4024 days ago
காரைக்கால்: காரைக்கால் பெரியபேட் பகுதியில் உள்ள புனித பிரான்சிஸ் ஆலயத்தில் ஆண்டு விழாவையொட்டி அலங்கார தேர்பவனி நடந்தது.காரைக்கால் பெரியபேட் பகுதியில் உள்ள புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயத்தில் ஆண்டு விழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கியது. தினம் மாலை திருப்பலி நடந்தது.கடந்த ௪ம் தேதி மின் அலங்கார தேர்பவனி மற்றும் நவ நாள் ஜெபம் நடந்தது. பாரதியார் வீதி, மாதாகோவில் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் தேர்பவனி சென்றது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை சின்னப்பன், பாப்சிம்சன், பெரிய நாயகி சாமி உட்பட பலர் செய்திருந்தனர்.