உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி திரவுபதி அம்மன் கோயிலில் தர்மன் பட்டாபிஷேகம்!

பரமக்குடி திரவுபதி அம்மன் கோயிலில் தர்மன் பட்டாபிஷேகம்!

பரமக்குடி: பரமக்குடி திரவுபதி அம்மன் கோயில் பூக்குழிவிழாவில், தர்மனுக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சி நடந்தது. இக்கோயிலின் பூக்குழி விழா செப். 23 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து அம்மன் திருக்கல்யாணம், அர்ச்சுணன் தபசு, பீமவேசம், சக்கரவாரிக்கோட்டை, அரவான் களப்பலியுடன், அக். 4ல் அம்மன் காளிவேசத்துடன் சபதம் முடித்து பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இரவு தர்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்து, செங்கோல் கொடுக்கும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது. ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் இத்திருவிழா, மகாபாரதத்தை நினைவுபடுத்துவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !