திருப்பரங்குன்றம் கோயிலில் வேலுக்கு இன்று அபிஷேகம் இல்லை!
ADDED :3765 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி, மலையின் அடிவாரத்தில் குடைந்து வடிவமைக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் கொண்டுவரும் பால், பன்னீர், விபூதி உள்ளிட்ட அபிஷேகங்கள் அனைத்தும் மூலவர் கரத்திலுள்ள தங்க வேலுக்கே நடக்கிறது. வேல் மலைமேல் கொண்டு செல்லப்படுவதால், இன்று (அக். 9) மட்டும் வேலுக்கு அபிஷேகம் இல்லை.