கொங்கலம்மன் கோவிலில் 18ம் தேதி லட்சார்ச்சனை
ADDED :3649 days ago
ஈரோடு : ஈரோடு கொங்கலம்மன் கோவிலில் 28ம் ஆண்டு நவராத்திரி விழா இன்று துவங்குகிறது. காலை, 9 மணிக்கு விநாயகர் பூஜை, கலச ஸ்தாபனம், ஸ்ரீ சூக்தம், துர்கா சூக்தம் நடக்கிறது. வரும், 18ம் தேதி காலை, 7 மணிக்கு ஏக தின லட்சார்ச்சனை நடக்கிறது. 22ம் தேதி காலை, 7 மணிக்கு ஸ்ரீ சூக்த பாராயணம் நடக்கிறது. நவராத்திரி நாட்களில் தினமும் காலை, 7 மணிக்கு துர்க்கா, லட்சுமி, சரஸ்வதிக்கு பாராயணம் நடக்கிறது. இன்று முதல் வரும், 22ம் தேதி வரை கோவிலில் நவராத்திரி விழா நடைபெறும். லட்சார்ச்சனையில் தமிழ் படிக்கத் தெரிந்த, பக்தர்கள் கலந்து கொள்ள கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.