தேசிலிங்கேஸ்வரர் கோவில் சனிப்பிரதோஷ விழா
ADDED :3939 days ago
பெ.நா.பாளையம்: சின்னமத்தம் பாளையத்தில் உள்ள ஆலுார் தேசிலிங்கேஸ்வரர், வீரமாஸ்தியம்மன் கோவிலில் சனிப்பிரதோஷ விழா நடந்தது. விழாவையொட்டி தேசிலிங்கேஸ்வரர், வீரமாஸ்தியம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை மற்றும் ஆராதனைகள் நடந்தன. நந்தீஸ்வரருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடந்தது. சிவபெருமான், பார்வதி ஆகியோர் பசு வாகனத்தில் எழுந்தருளி, கோவிலைச்சுற்றி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.