ராஜபாளையம் சிவாலயங்களில் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு
ADDED :3707 days ago
ராஜபாளையம் : சனி கிழமையில் பிரதோஷம் வரும்போது சிவாலயங்களில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். நேற்று முன்தினம் நடந்த சனி பிரதோஷத்தில் ராஜபாளையத்தில் உள்ள அறநிலையத்துறையை சேர்ந்த மாயூரநாதசுவாமி கோயில், முடங்கியார்ரோடு சித்தி விநாயகர் கோயில், அம்பலபுளி பஜார் சுப்பிரமணியசுவாமி கோயில், காந்தி சிலை அருகே அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சுவாமி மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தன.
* தளவாய்புரம், சொக்கநாதன்புத்தூர் தவநந்திகண்டேஸ்வரர் கோயில், தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில்,சேத்தூர் திருக்கண்ணீஸ்வரன் கோயில்களில் சனி பிரதோஷ பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.