பு.முட்லூரில் தீ மிதி விழா துவக்கம்
ADDED :5222 days ago
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூரில் உள்ள புற்றுமாரியம்மன் கோவில் தீ மிதி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.அதையொட்டி கோவிலில் கொடியேற்றப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடந்து வருகிறது. வரும் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை காத்தவராயன் கதைப்பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.5ம் தேதி தீ மிதி திருவிழா மற்றும் சாகை வார்த்தல் நடக்கிறது. 6ம் தேதி அரிச்சந்திரா நாடகமும், 7ம் தேதி அரிச்சந்திரா மயான காண்டம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா சீனு செய்து வருகிறார்.