சிதம்பரம் மாரியம்மன் கோவில் கொடியேற்றம்
ADDED :5222 days ago
சிதம்பரம் : சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் தீ மிதி விழா கொடியேற்றுத்துடன் துவங்கியது.சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் தீமிதி விழா கடந்த 22ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. அதையொட்டி அம்மன் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கொடிமரம் எதிரே எழுந்தருள செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.கொடியேற்றம் துவங்கியதையொட்டி தினமும் இரவு அம்மன் வீதியுலா நடக்கிறது. 26ம் தேதி தெருவடைச்சானும், 31ம் தேதி காலை தேர் திருவிழாவும் நடக்கிறது.வரும் 1ம் தேதி தீ மிதி உற்சவம் நடக்கிறது. அன்று காலை 5 மணி முதல் அங்கபிரதட்சணம், அலகு போடுதல், பால்காவடி, பாடை பிரார்த்தனைகளும் மாலை தீ மிதி உற்சவமும் நடக்கிறது.