சாமுண்டீஸ்வரி கோவிலில் கத்தி போடும் விழா நிறைவு
ADDED :5222 days ago
புவனகிரி : புவனகிரி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் கத்தி போடும் திருவிழா நிறைவடைந்தது.புவனகிரி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் தேவாங்கர் சமூகத்தைச் சேர்ந்த பக்தர்கள் உடலில் கத்தி போட்டு அம்மனுக்குநேர்த்திக் கடன் செலுத்தும் திருவிழா கடந்த 14ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் 23ம் தேதி வரை 10 நாட்கள் நடந்தது.10ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் தேவாங்கர் பக்தர்கள் காலை கீழ்புவனகிரி வெள்ளாற்றிற்கு சென்று யானையின் மேல் புனித நீருடன் புரோகிதர் அமர்ந்து வரும் வீதியுலா நடந்தது.ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் திருவிழா என்பதாலும் கடைசி நாள் திருவிழா என்பதாலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று உடலில் கத்தி போட்டுக்கொண்டனர்.அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் மாலை மஞ்சள் நீர் உற்சவமும் நடந்தது.