வேண்டவராசி அம்மன் கோவில்ஆடித் திருவிழா கோலாகலம்
ADDED :5223 days ago
திருப்போரூர்:நெல்லிக்குப்பம் வேண்டவராசி அம்மன் கோவிலில், 52வது ஆண்டு ஆடித் திருவிழா, நேற்று கோலாகலமாக நடந்தது.திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பத்தில், புகழ்பெற்ற நெல்லிவனத்தேவி வேண்டவராசி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆடி மாதம் 2வது வாரம் ஆடித்திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு, 52வது ஆண்டு ஆடித்திருவிழா நடந்தது. காலை 6 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு, 108 சங்காபிஷேகம் நடத்தப்பட்டது.காலை 10 மணிக்கு, 108 பால்குட அபிஷேகம் நடந்தது. மாலை 3 மணிக்கு, புலவர் ஜெயமூர்த்தி திரவுபதி திருமணம் ஆன்மிக சொற்பொழிவும், இரவு, கேரள ஷேத்திர கலாவின் சிங்காரி மேளத்துடன் அம்மன் வீதியுலா வாணவேடிக்கை முழங்க, ஆடித்திருவிழா கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.