உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமிமலை முருகன் கோவிலில் இன்று தெப்பத்திருவிழா ஏற்பாடு

சுவாமிமலை முருகன் கோவிலில் இன்று தெப்பத்திருவிழா ஏற்பாடு

கும்பகோணம்: சுவாமிமலை முருகன் கோவிலில் வருகிற இன்று (25ம்தேதி) ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. முருகனின் ஆறுபடைவீடுகளில் நான்காவது படைவீடாக சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் திகழ்கிறது. மூர்த்தி,தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடையது இக்கோயில். இக்கோயிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா இன்று நடக்கிறது. இதை முன்னிட்டு அன்று காலை 5மணிக்கு நடைதிறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு நடைபெறும். இதையடுத்து இன்று மாலை 6மணிக்கு சிவபுரம் விஜயகுமார் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சியுடன் மாலை விழா தொடங்குகிறது. இதையடுத்து தங்கமயில் வாகனத்தில் சுவாமி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து நேத்ர புஷ்கரணியில் தெப்பத்திருவிழா நடக்கிறது. இவ்விழாவை முன்னிட்டு கும்பகோணம் ஹரிஹரன் குழுவினரின் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் மற்றும் இணை கமிஷனர் செல்வராஜ் மேற்பார்வையில் கோயில் துணை கமிஷனர் தென்னரசு மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !