உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை திருமூர்த்திமலை கோவிலில் மகாளய அமாவாசை!

உடுமலை திருமூர்த்திமலை கோவிலில் மகாளய அமாவாசை!

உடுமலை: மகாளய அமாவாசையை முன்னிட்டு, திருமூர்த்திமலை, அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது.

உடுமலை, திருமூர்த்திமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது அமணலிங்கேஸ்வரர் கோவில்.  புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசையாக கொண்டாடப்படுகிறது.
அன்று முன்னோர்களுக்கு திதி கொடுத்து, வழிபடுவது வழக்கம். இதையொட்டி, அமணலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று கலை சிறப்பு பூஜை நடந்தது. மாலை சிறப்பு அபிேஷக ஆராதனையும் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !