உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீவனூர் பெருமாள் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்!

தீவனூர் பெருமாள் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்!

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தீவனூர் லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில், பள்ளிக்கொண்ட அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. தீவனூரில் லட்சுமிநாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் புரட்டாசி மாத ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு, காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

வெள்ளி கவசத்தில் சுவாமி அருள்பாலித்தார். இரவு 7:00 மணிக்கு, பள்ளிகொண்ட ரங்கநாதர் அலங்காரத்தில், லட்சுமிநாராயண பெருமாள் சுவாமி வீதியுலா நடந்தது. ஐந்தாம் சனிக்கிழையன்று, ஸ்ரீதேவி, பூதேவி நாராயண சுவாமி அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரம்பரை தர்மகத்தா முனுசாமி செய்திருந்தார்.சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ் பெக்டர் சுப்பையா வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகிறார் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !