உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் யோக ஆஞ்சநேயருக்கு சஞ்சீவி அலங்காரம்!

விழுப்புரம் யோக ஆஞ்சநேயருக்கு சஞ்சீவி அலங்காரம்!

விழுப்புரம்: விழுப்புரம் யோக ஆஞ்சநேயர், சஞ்சீவி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் காலனியில் உள்ள யோக ஆஞ்சநேயர் கோவிலில், புரட்டாசி நான்காம் சனிக்கிழமை உற்சவம் நடந்தது.

இதையொட்டி கோவிலில் உள்ள யோக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து ஆஞ்நேயர், சஞ்சீவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு மகா தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி அதிகாரிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !