திருப்பரங்குன்றம் நவராத்திரி விழா!
ADDED :3655 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மற்றும் திருநகர் கோயில்களில் இன்று (அக்., 13) முதல்
நவராத்திரி கொலு உற்சவம் துவங்குகிறது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில்
பல்வேறு அலங்காரங்களில் கோவர்த்தனாம்பிகை அம்பாள் அக்., 21 வரை அருள்பாலிப்பார். அக்.,
22ல் சுப்பிரமணிய சுவாமி, பசுமலை அம்பு போடும் மண்டபத்தில் அம்பு எய்தல் நிகழ்ச்சி
நடக்கிறது. திருநகர் சித்தி விநாயகர் கோயில், ஹார்விபட்டி பாலமுருகன் கோயில் ஆகியவற்றிலும் நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளன.